மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி அணிவகுத்துச் செல்ல முயன்றபோது ஹரியானா எல்லையில் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது வன்முறையாகவும் வெடித்துள்ளது. இந்நிலையில்  இவர்கள் விவசாயிகள் அல்ல காங்கிரஸ் கட்சியால் அனுப்பப்பட்ட காங்கிரஸ் குண்டர்கள் என சமூகவலைதளத்தில் விமர்சிக்கபட்டு வருகிறது. 

அதாவது மத்திய அரசு அறிவித்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான், பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி தொடங்கினார். அதில் கேரளா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் அவர்களை தடுக்க திட்டமிட்ட ஹாரியான காவல்துறை தங்களது மாநில எல்லையில் (பேரிகார்டு) தடுப்புகளை அமைத்து தடுக்க முயற்சித்துள்ளது. இதனால் அங்கு திரண்ட பல்லாயிரக்கணக்கான  விவசாயிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. நிலையில் தண்ணீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி விவசாயிகளைக் கலைத்தனர். இதனால் போரணி மோதலாக மாறி அது வன்முறையில் முடிந்தது.  

இந்நிலையில் ஹரியானாவில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. போராட்டத்தை கண்காணிக்க போலீசார் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பேரணி வன்முறையில் முடிந்ததையடுத்து இது குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன." இவர்கள் விவசாயிகள் அல்ல காங்கிரஸ் கட்சியால் திட்டமிட்டு அனுப்பப்பட்ட குண்டர்கள்" 

பஞ்சாப் மாநில அரசு திட்டமிட்டு ஒரு கலவரத்தை உருவாக்க விவசாயிகள் என்ற போர்வையில் காங்கிரஸ் குண்டர்களை அனுப்பி வைத்துள்ளது.

இந்த மசோதாவை ஒட்டுமொத்த நாடும் வரவேற்கிறது, எனவும் ஆனால் இதுபோலி விவசாயிகள் இயக்கம், பஞ்சாபின் தானிய மண்டலங்களில் ஒவ்வொரு பருவத்திலும் பில்லியன் கணக்கான விவசாயிகளை கொள்ளையடித்துக் மோசடி செய்யும் இடைத்தரகர்கள் மற்றும் ஊழல்வாதிகள் நடத்தும் இயக்கம் இது என கடுமையாக விமர்சித்துள்ளனர். 

அதேபோல்   சிஏஏ பந்த், வேளாண் சட்டம் எதிர்ப்பு,  ஜாட் அந்தோலன்,  எக்ஸ் ஒய் இசட்... மகா பேரணி போன்றவற்றின் மூலம் நாடு ஆபத்தை சந்தித்து வருகிறது என விவசாயிகளின் போராட்டம் குறித்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.