விழுப்புரம் அருகே  8 வயது சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்ததுடன் 14 வயது  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த  மர்ம கும்பலை விரைவில் கைது செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை இவரது மனைவி ஆராயி  கடந்த சில ஆண்டுகளுக்கு ஏழுமலை இறந்து விட்டார். இவர்களுக்கு 4 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.

தற்போது வெள்ளம்புத்தூரில் ஆராயி தனது கடைசி மகன் சமயன், மகள் தனம் ஆகியோருடன் வசித்து வருகிறார். மற்றவர்கள் அனைவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி   ஆராயி மற்றும் அவரது குழந்களி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து 3 பேரையும் பயங்கர ஆயுதத்தால் சராமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் சிறுவன் சமயன்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். தொடர்ந்து  ஆராயி யை தாக்கிய அந்த கும்பல் அவரை குற்றுயிராக்கியது. அதற்கு பின்னர் தான் அந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

14 வயது சிறுமி என்றும் பார்க்காமல் தனத்தை கூட்டாக சேர்ந்து அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததுள்ளது.  இதில் அந்த சிறுமியும் படுகாயமடைந்தார்.

அடுத்த நாள் வெகு நேரமாகியும் ஆராயி வீட்டு கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அவரது வீட்டுக்கு சென்று பார்த்த போது, மூன்று பேரும் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார், படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு  புதுச்சேரி  ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சினிமா பாணி போல் நடந்த இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொஞ்ம்கூட ஈவு இரக்கமின்றி சிறுவனை படுகொலை செய்த அந்த கும்பல், சிறுமி என்றும் பாராது தனத்தை பாலியல் வன்கொடுமை செய்ததது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது அந்த சிறுமி ஜிப்மர் மருத்துமனையில் கந்தல் துணி போல் உயிருக்கு போராடி வருகிறார். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் இன்னும் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.