Asianet News TamilAsianet News Tamil

இத்தனை கஷ்டப்பட்டு வளர்த்த கட்சியை ஒழிச்சுக் கட்டிட்டீங்களே... பிரேமலதா மீது விஜயகாந்த் கடும் கோபம்..!


குறுக்கு நெடுக்காக கோணச்சால் அடித்து கடைசியில் ஒரு வழியாக அமமுகவுடன் கூட்டணி அமைத்து விட்டது தேமுதிக.

Vijaykanth angry over Premalatha
Author
Tamil Nadu, First Published Mar 15, 2021, 11:28 AM IST

குறுக்கு நெடுக்காக கோணச்சால் அடித்து கடைசியில் ஒரு வழியாக அமமுகவுடன் கூட்டணி அமைத்து விட்டது தேமுதிக. முன்பு யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என இரு மாதங்களுக்கு முன், பிரேமலதா, சுதீஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்டோருடன் விஜயகாந்த் ஆலோசித்துள்ளார்.

அப்போது 'பா.ஜ.க., எந்த அணியில் இருக்கிறதோ, அங்கே போய்விடலாம்' என விஜயகாந்த் கூறியதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். அ.தி.மு.க., முதலில், பா.ம.க.,விடம் பேசியது, பிரேமலதாவுக்கும், விஜய பிரபாகரனுக்கும் பிடிக்கவில்லை.பா.ம.க.,வுக்கு அதிக இடங்களைக் கொடுத்து விட்டு,அதை வைத்தே, தங்களுக்கு 'சீட்'டை குறைத்து விடுவர் என, பிரேமலதா அஞ்சினார்.Vijaykanth angry over Premalatha

ஆனால், பா.ஜ., பா.ம.க.,வுடன் பேசி முடித்த பிறகே தே.மு.தி.க.,வை அழைத்தது. அ.தி.மு.க., எடுத்த எடுப்பில் தே.மு.தி.க., 49, 50 என சொன்னதும், வேலுமணி, தங்கமணி 'இது சரிபட்டு வராது; பேச்சை நிறுத்திடலாம்' என்றனர். எடப்பாடி சம்மதிக்கவில்லை. 'நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தலில் நம்மோடு இருந்து விட்டார்கள். ஒன்றிரெண்டு கூட்டிக் குறைத்து பேசி விடுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

ஆனாலும் விஜயகாந்த் குடும்பம் பிடிவாதமாக இருந்ததால், வெறுத்துப்போன எடப்பாடி அவர்கள் வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டார். அடுத்து, தி.மு.க.,விடம் பேசினர். அங்கே, அ.தி.மு.க., சொன்னதில் பாதியை தருவதாகக் கூறினர். அதோடு, உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என,'கண்டிஷன்' போட்டனர். அ.தி.மு.க., மாதிரி நிதியெல்லாம் தர முடியாது என்றும் சொல்லி விட்டனர்.

உடனே, கமல் கட்சி ஆபீசுக்கு சென்றனர். 'விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் நாம் சேரலாம்' என சொன்னதும், கமல், 'டென்ஷனாகி' ரூமுக்கு போய்விட்டார். அடுத்து இருக்கவே இருக்கிறார் டி.டி.வி.தினகரன் என்று ஓடினார்கள். அவரும், 'முதல்வர் வேட்பாளர் நான் தான். 'சீட்' எத்தனை வேண்டுமானாலும் தருகிறேன்; பணம் கிடையாது' என, கூறிவிட்டார்.Vijaykanth angry over Premalatha

வேறு வழியே இல்லாமல் நட்டாற்றில் நின்றது தே.மு.தி.க., தேர்தல் புறக்கணிப்பு அல்லது தனித்துப் போட்டி இரண்டே சாய்ஸில் தடுமாறிய தே.மு.தி.க.,வுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க முன் வந்தார் தினகரன்.

கடந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் சேர நல்ல வாய்ப்பு கிடைத்த போது, அதை தட்டி விட்டு, வைகோ பேச்சை நம்பி, மக்கள் நல கூட்டணி துவங்கியதும், பிரேமலதா வற்புறுத்தலால் தான். இன்றைய நிலைக்கும் காரணம் மனைவி தான் என, கேப்டன் குமுறுவதாக தகவல்.அனுபவமே இல்லாத மகன் விஜய பிரபாகரன், மாற்றுக் கட்சியினரை மோசமாக விமர்சித்ததாலேயே, பெரிய கட்சிகள் சேர்க்கவில்லை என்றும், அவர் வருத்தப்படுவதாக சிலர் சொல்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios