சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 6 மணி முதல் தொடங்கிய சோதனை மதியம் வரை நீடித்து வருகிறது.  

சென்னை  மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள கல்லூரிகளில் கல்குவாரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர் .

கிரீன் வேஸ் சாலையில் உள்ள விஜய பாஸ்கரின் வீடு மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ  விடுதியில் உள்ள அவரது அறை, புதுக்கோட்டை ராஜ கோபால புரத்தில் உள்ள அலுவலகம் , இலும்பூரில் உள்ள அவரது கல்லூரி, எழும்பூரில் உள்ள சகோதரி வீடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமனவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

வருமானவரித்துறை நடத்திய சோதனையின் நடுவே, தன் மகளுடன் வந்து செய்தியாளர்களை சந்தித்த விஜய பாஸ்கர் பல கருத்துக்களை முன்வைத்தார்.

அப்போது  காலை முதல் கேள்வி மேல் கேள்வி கேட்டு துன்புறுத்துவதாகவும், தன் குழந்தை கூட இன்று பள்ளிக்கு செல்ல முடியவில்லை, நடிகர் சரத் குமாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என பல  கேள்விகள் கேட்டு தன்னை துன்புறுத்தியதாக நடிகர்  விஜபாஸ்கர் தெரிவித்தார்.

மேலும், தமிழக சுகாதாரத்துறையை பாராட்டி இன்று, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம், தமிழக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், விருது பெற இருந்தார்.

அதற்காக அவருக்கு இன்று காலை 8.45 க்கு பிளைட் புக்  செய்துள்ளார்  விஜபாஸ்கர். ஆனால் திடீரென வருமானவரித்துறையினர்  சோதனையில் ஈடுபட்டதால் அவரால் பயணிக்க முடியவில்லை என்பதாலும், பிரணாப் முகர்ஜியிடம்  விருது வாங்க முடியவில்லையே என்றும் தன் விரக்தியை வெளிப்படுத்தினார்.