vijayakath protest foe sugar price hike in ration shops

தமிழக ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் மசூர் பருப்பை மச்சர்கள் வாங்கி சாப்பிடுவார்களா என கேள்வி எழுப்பிய தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், என்னனோட பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குத் தான் புரியும், இபிஎஸ் போன்றவர்களுக்கு புரியாது என அதிரடியாக தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்தைக் கண்டித்து தேமுதிக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம்ட அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.

ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து செய்தியாள்களிடம் பேசிய விஜயகாந்த் , இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வேண்டும் என்றும் அப்போது தான் மக்களுக்கு உண்மை நிலை தெரிய வரும் என்று கூறினார்.

நியாய விலை கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என்றும், அங்கு விற்பனை செய்யப்படும் மசூர் பருப்பை அமைச்சர்கள் வாங்கி சாப்பிடுவாகளா எனவும் கேள்வி எழுப்பினார்..

என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்கு தான் புரியும் என்றும் ஈபிஎஸ் போன்றவர்களுக்குஅது புரியாது என்றும் விஜயகாந்த் தெரிவித்தார்

கோவையில் தமிழக ஆளுநர் ஆய்வு மேற்கொண்டது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், தொடர்ந்து அவர் பல்வேறு மாவட்டங்களுக்கு விசிட் அடித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் நல்ல நடிகர்கள் என்றும் விஜய காந்ர் தெரிவித்தார்..