குரல்வளம் வேண்டி பழமைவாய்ந்த ஓசைநாயகி அம்மன் ஆலயத்தில், தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் குடும்பத்தினரோடு வழிபாடு நடத்தினார். வழிபாடு செய்த விஜயகாந்த், தேன் பிரசாதம் சாப்பிட்டார்.

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த கேப்டன் விஜயகாந்த் ரமணா படம் வரை தனது அடுக்கடுக்கான வசனங்களால் அடித்தட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்தார். விஜயகாந்த்தின் வசனத்திர்க்கேன்றே தனிக் கூட்டம் கூடியது. மிக நீளமான வசனங்களையும் தாறுமாறு செய்திருப்பார்.

அரசியலிலும் ஆளும் கட்சி, எதிர்கட்சி என ஒட்டுமொத்தமாக தெறிக்க விட்டார். ஜெயலலிதாவோடு கூட்டணி அமைத்து எதிர்கட்சியாக அமர்ந்தார். அப்போது சில நாட்களிலேயே ஆளும் கட்சியை எதிர்த்தது சிங்கமாக கர்ஜித்தார். இப்படி ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளை அலறவிட்ட கேப்டன்  கடந்த பல மாதங்களாகவே, விஜயகாந்த் தொண்டை பிரச்சினையால் அவதிப்பட்டு, பழையமாதிரி பேச முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். என்னதான் மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொண்டாலும், ஆன்மீக வழியில், தனது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.  

இந்நிலையில், நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ளது பழமைவாய்ந்த ஓசைநாயகி அம்மன் ஆலயம். இங்கு குரல் பாதிப்பு உள்ளோர் மனமுருக வணங்கினால், அந்த பாதிப்பு நிவர்த்தியாகும் என்ற காலம் காலமாக நம்பிக்கையுள்ளது. இந்த கோயிலில் வழங்கப்படும் தேன் பிரசாதத்தில் மகத்துவம் உள்ளதாக பக்தர்கள் சொல்கிறார்கள்.இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் குரல் வளம் வேண்டி குடும்பத்தினரோடு ஓசைநாயகி அம்மன் ஆலயத்தில், வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது. இதன்பிறகு விஜயகாந்த், தேன் பிரசாதம் சாப்பிட்டார்.  இதற்கு முன்  கோவில் சார்பாக பரிவட்டம் கட்டி அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.