தேசிய முற்போக்கு திராவிட கழகத்தலைவர் விஜயகாந்த் நாளையொட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

விஜயகாந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 25-ம் தேதியை வறுமை ஒழிப்பு தினமாக தே.மு.தி.க கடைப்பிடித்து வருகிறது. அந்தத் தினத்தில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது வழக்கம். 

அதன்படி விஜயகாந்த் பிறந்தநாள் தினத்தையொட்டி நேற்று சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை கழகத்தில் விழா நடைபெற்றது.

இவ்விழாவில்  விஜயகாந்த் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 100 ஊராட்சிகள், 2000 கிராமங்கள், வருடம் 10,000 ஏக்கர், ஏர்உழுது 3000 விவசாயிகள் பயன்படுகின்ற வகையில், இலவசமாக நவீன விஞ்ஞான முறையில் ஏர்உழவும், விதை விதைப்பும் பயன்படுகின்ற வகையில் 6 இலட்சத்து 30 ஆயிரம் மதிப்புடைய டிராக்டர்களை வழங்கினார். 

இந்நிலையில், இன்று விஜயகாந்த் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விஜயகாந்தை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.