vijayakanth talks about rajini and kamal

நல்லா கேட்டுகோங்க...அரசியலில் நான் தான் சீனியர்..அவங்க சினிமாவில் மட்டுமே...விஜயகாந்த பளார் பளார்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சென்னை அம்பத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது, செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு மனதில் உள்ளதை அப்படியே பதிலாய் கொட்டினார்.....

அதாவது,ரஜினி கமல் இருவரும் சினிமாவில் தான் தனக்கு சீனியர்,அரசியலில் நான் தான் அவர்களுக்கு சீனியர் என குறிப்பிட்டு உள்ளார்.

ரஜினியின் ஆன்மீக அரசியல் என்பது புதுமையானது..கமலின் ட்விட்டர் அரசியல் என்பது வேறு ஒரு புதுமையானது ...

ஆனால் களத்தில் இறங்கி பணியாற்றிய பெருமை,விஜயகாந்துக்கு உண்டு.. இந்த அரசியல் அனுபவத்தை பார்க்கும் போது விஜயகாந்த் சீனியர் தான் என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும், திமுக தரப்பிலிருந்து விஜகாந்துக்கு ஒரு அழைப்பு காத்திருக்கு என்று அரசியல் விமர்சனம் கூறுகிறது.

பி.ஜே.பி பற்றி வாய் திறந்த விஜயகாந்த், தமிழகத்தில் அவர்கள் கை அல்ல கால் கூட ஊன்ற முடியாது என தெரிவித்து உள்ளார்.