சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து எதிர்க்கட்சி அளவுக்கு உயர்ந்தவர் விஜயகாந்த். கேப்டன் என்று அவரது தொண்டர்களால் அழைக்கப்படும் விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக  உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

அவருக்கு சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். திரைப்படங்களில் அவர்கள் நடிப்பதுடன், கட்சிக் கூட்டங்களிலும் அவ்வப்போது கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஸ்டாம்ப்வெண்டர் இளங்கோவின் மகளுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. 

அந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. நிச்சயதார்த்தக் கோலத்தில் விஜயபிரபாகரன் இருப்பது போன்ற புகைப்படங்கள் உள்ளிட்ட புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது
இந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். மிகவும் எளிமையாக இந்த நிகழ்வை விஜயகாந்த் குடும்பத்தினர் நடத்தியதாக கூறப்படுகிறது.