உடல்நலக் குறைவால் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்றுள்ள நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது பிறந்த நாளில் அவரது மனைவி பிரேமலதாவோடு அனாதை இல்லத்திற்கு சென்ற விஜயகாந்த்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

இது  ஏதோ பரிதாபப்பட்டு லைக், ஷேர் பண்ணுவதற்காக பதிவிடப்பட்ட வீடியோ போல தெரியவில்லை, அதையும் மீறி ஆதரவற்றவர்களுடன் அவர்களின் பிள்ளையைப் போல அவ்வளவு அழகாக பேசுகிறார். அந்த ஆதரவற்ற முதியோர்களும் சின்ன வயசில் தனது குழந்தையை பேசவைத்து பார்ப்பதைப்போல பழைய நினைவுகளை நினைத்து பார்ப்பதைப்போலவே ஒரு நிகழ்வாக இருக்கிறது.

அனாதை இல்லத்தில் இருக்கும் முதியோர்களிடம் அவ்வளவு இனிமையாக, ஆறுதல் அளிக்கும் விதமாக பேசிய வீடியோவானது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. எவ்வளவு கல் நெஞ்சமாக இருந்தாலும் அழாமல் இருக்கவே முடியாது.

இதோ அந்த வீடியோ... 

"