விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டது முதலே அவரது விசிறிகளும், நண்பர்களும் வேதனை அடைந்து வரும் நிலையில் அவரது நண்பர் தேம்பி தேம்பி அழுத விஷயம் தெரிய வந்துள்ளது. 

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்தை தேர்தலுக்காக சென்னைக்கு அழைத்து வந்தது அவரது குடும்பத்தினர். மக்களவை தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. பிரச்சாரம் முடிந்த இறுதி நாளன்று சென்னையில் மட்டும் பிரச்சாரம் செய்தார். அப்போது அவரால் பேசமுடியவில்லை. 

விஜயகாந்தின் பால்ய கால நண்பர் சுந்தர்ராஜன். 2011 சட்டசபை தேர்தலில் அவருக்கு, மதுரை மத்திய தொகுதியில் சீட் கொடுத்து வெற்றிபெற வைத்தார். சில ஆண்டுகளில் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுந்தர்ராஜன், அதிமுகவில் இணைந்து விட்டார். அதன் பிறகு இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் போய் விட்டது.

கடந்த வாரம், வடசென்னை, தேமுதிக வேட்பாளரை ஆதரித்து, விஜயகாந்த் பிரசாரம் செய்ததை டிவியில் பார்த்திருக்கிறார். அப்போது அவர் பேச ரொம்பவே சிரமப்பட்டதை பார்த்து, சுந்தர்ராஜன் கண்ணீர் விட்டு அழுதுட்டாராம். 'சிங்கம் மாதிரி இருந்தவர், இப்படி ஆயிட்டாரே' என தேம்பித் தேம்பி அழுதவரை அருகில் இருந்தவர்கள் தேற்றி ஆற்றுப்படுத்தி இருக்கிறார்கள்.