ஜல்லிக்கட்டு விதிக்கப்பட்ட  தடையை நீக்க வேண்டும் என  தேமுதிக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் ஆவேசமாக மத்திய அரசை கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க கோரி அமெரிக்க ஆதரவு பீட்டா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதற்கு முன்னர் பீட்டாவின் அழுத்தம் காரணமாக காட்சி விலங்குகள் பட்டியலில் காளைகள் சேர்க்கப்பட்டது. இதையே காரணமாக வைத்து உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு ,  ஜல்லிக்கட்டு நடத்தும் அமைப்பு உட்பட 9 அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இதற்கான விசாரணை இன்று வர உள்ளது. ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்தியே தீருவோம் என தமிழக இளைஞர்கள் திரண்டு போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தடையை மீறி நடத்துவோம் என பலவேறு அமைப்புகள் கூறியுள்ளன.
தமிழகம் முழுதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அனைத்து கட்சிகள் போராட்டத்தில் குதித்து வருகின்றனர். மதுரை வாடி வாசல் முன்பு தேமுதிக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டார்.
அப்போது நடந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது. ஜல்லிக்கட்டு காளைகள் மட்டும் தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா கேரளாவில் யானையை வைத்து பந்தயம் விடுகிறார்களே அது கண்ணுக்கு தெரியவில்லையா? வடமாநிலங்களில் ஒட்டகங்களை துன்புறுத்துகிறார்களே ரேஸ் விடுகிறார்களே அது தெரியவில்லையா ,  ஜல்லிக்கட்டு காளைகள் மட்டும் தான் கண்ணுக்கு தெரிகிறதா? நாங்க காளைகளை அடக்குவோம் இவர்கள் கண்ட்ரோல் பண்ணுவாங்களாம் ஏண்டா? என்று ஆத்திரத்துடன் பேசினார்.