vijayakanth press meet
தமிழகத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தோல்வி ஆட்சி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மழையினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர் .
இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்,"வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை.வரும் ஐந்து ஆண்டுகளுக்கும் ஆட்சியை ஒப்பேத்துவதற்காக நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளதாக கூறுகின்றனர் என குற்றம்சாட்டினார்.
தங்களுக்கு நிதி ஒதுக்குவதற்காகவே, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளனர். சென்னையில் ஒருநாள் பெய்த மழைக்கே மாநகராட்சியால் தாங்க முடியவில்லை. சென்னையில் பலநாட்கள் கனமழை பெய்தால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என கூறினார்.
மேலும் தேமுதிக வளர்சியடைந்துவருகிறது.வரும் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அறிவித்த அவர், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டதாகவும், தற்போது நடப்பது தோல்வி ஆட்சி என்றும் கூறினார்.
