vijaya kanth press

சென்னை மற்றும் சேலம் ஆகிய இடங்களில் பத்திரிகையாளர்கள் அவமதிக்கும்படி நடந்து கொண்ட விவகாரங்களில், இந்திய பிரஸ் கவுன்சிலிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருத்தம் தெரிவித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை, அடையாறு, மத்திய கைலாஷ் பகுதியில் நடந்த, அவரது கட்சியின் ரத்த தான முகாமுக்கு வந்திருந்தார்.

அப்பொழுது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர், '2016ல் அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்குமா?' என, கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த விஜயகாந்த், ''அ.தி.முக., ஆட்சியை பிடிக்காது. இந்த கேள்வியை ஜெயலலிதாவிடம் கேட்க முடியுமா? உங்களுக்கு அந்த தைரியம் இருக்கா?'' என கூறியவர், திடீரென பத்திரிகையாளர்களை நோக்கி "தூ" என காரித் துப்பினார்.

இதனால், அங்கு கூடிய நிருபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

நடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக சேலம் சென்ற விஜயகாந்த், அங்கு கூட்ட நெரிசலில் தன்னிடம் கேள்வி கேட்க முயன்ற பத்திரிகையாளர்களை நோக்கி மிரட்டும் தொனியில் பேசினார்.

இந்த இரண்டு சம்பவங்களின் காரணமாக அவர் மீது இந்திய பிரஸ் கவுன்சிலின் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் டில்லியில் இந்திய பிரஸ் கவுன்சில் முன்பு விஜயகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜரானார். அப்போது அவர், பத்திரிகையாளர்களை நோக்கி எச்சில் துப்பியதற்காக விஜயகாந்த் சார்பில் மன்னிப்பு கோரினார்

இதனை ஏற்றுக் கொண்ட பிரஸ் கவுன்சில் அவர் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது..