கடந்த ஆட்சியில் ஆரணி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் பாபு முருகவேல்.
இவர் தேமுதிகவின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில் பாபு முருகவேல் இன்று காலை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இதையடுத்து கழகத்தின் கட்டுபாட்டை மீறியதாகவும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகவும் கூறி கழக பதவியில் இருந்து நீக்குவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
மேலும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்குவதாக தெரிவத்துள்ளார்.
இவருக்கு பதிலாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக கோபிநாதன் என்பவரை நியமித்துள்ளார்.
கோபிநாதன் தெள்ளார் ஒன்றிய கழக செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
