அதிமுகவுடன் பேரம் படிந்ததால் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோர் கிரவுன் பிளாசா ஓட்டலில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  

அதிமுக - தேமுதிக இடையே இன்னும் சற்று நேரத்தில் தொகுதி உடன்பாடு ஏற்பட உள்ளது. திமுக கூட்டணியில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியில் தேமுதிகவும் இடம் பெற பேச்சுவார்த்தை நடத்திவந்தது. ஆனால், பாமகவுக்கு ஒதுக்கிய அதே அளவுக்கு தங்களுக்கும் சீட்டுகள் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக அடம் பிடித்ததால், கூட்டணியில் இழுபறி ஏற்பட்டது. இடையே திமுகவும் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க முயன்றதால், தேமுதிக சார்பில் அதிக சீட்டுகள் கேட்டு அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. கேட்ட சீட்டுகளை ஒதுக்கக்கோரி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் பலமுறை தேமுதிக சார்பில் பேச்சுவார்த்தை நடத்திவந்தது.

திமுக கூட்டணி திடீரென்று தேமுதிகவுக்கு கதவை அடைத்ததால், அதிமுகவை தவிர வேறு கூட்டணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அதிமுக சார்பில் சீட்டுகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் திமுகவுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்த முயன்றதால், அரசியல் அரங்கில் அது பரப்பரப்பை ஏற்படுத்தியது. தேமுதிகவின் பேர அரசியல் கடும் விமர்சனத்துக்குள்ளானது. என்றாலும், தேமுதிக கூட்டணியில் இணைய இன்று வரை அதிமுக கெடு விதிருந்தது.

இந்நிலையில் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட சில நிமிடங்களில் சென்னை நந்தனம் பகுதியில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதியை அறிவிப்பதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா தனது கணவர் விஜயகாந்த் மற்றும் நிர்வாகிகளுடன் வந்துள்ளார். அங்கு எடப்பாடி, ஓ.பி.எஸ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

அதன்படி 4 சீட்டுகளும் வேறு வகையிலான சில உதவிகளும் வழங்க அதிமுக முன் வந்துள்ளது. பேரம் படிந்ததால் கூட்டணி உடன்படிக்கையில் கையெழுத்தாக உள்ளது.