Asianet News TamilAsianet News Tamil

15 ஆண்டுகால விசுவாசியை இழந்த விஜயகாந்த் குடும்பம்... தேம்பி தேம்பி அழுத பிரேமலதா..!

இந்தமுறை பிரேமலதா மதுரை சென்றபோது வரவேற்க முஜிபுர்ரஹ்மான் இல்லாதது கண்டு பிரேமலதா கண்கலங்கி அழுது விட்டாராம். 

Vijayakanth is family loses 15 years of faith ... Premalatha feeling
Author
Tamil Nadu, First Published Jul 13, 2021, 3:31 PM IST

விஜயகாந்த் மீது மதுரைக்காரர்களுக்கு எப்போதுமே மரியாதை உண்டு. காரணம் அவர் சொந்த ஊர் மதுரை. அங்கு ரைஸ்மில் வைத்து நடத்தி வந்தது விஜயகாந்தின் குடும்பம். விஜயகாந்த் தனது கட்சியை அறிவித்து முதல் மாநாடு நடத்தியதும் அங்குதான்.Vijayakanth is family loses 15 years of faith ... Premalatha feeling

மதுரையில், தே.மு.தி.க., தொழிற்சங்க பேரவை மாநில பொருளாளரும், 2016 சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்குத் தொகுதி வெற்றி வேட்பாளருமான  முஜிபுர்ரகுமான், நகர செயலர் சிவமுத்துக்குமரன் உட்பட ஏழு நிர்வாகிகள் கொரோனா தாக்கி உயிரிழந்து விட்டனர். இவர்களது வீடுகளுக்கு சென்று ஆறுதல் சொல்ல, விஜயகாந்த் மனைவி பிரேமலதா சமீபத்தில் மதுரைக்கு சென்று இருந்தார். 

முன்னதாக, முஜிபுர்ரகுமான், விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் யார் மதுரைக்கு வந்தாலும், விமான நிலையம் சென்று முதல் ஆளாக வரவேற்று, தங்குமிடத்துக்கு அழைத்துச் சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். மதுரையில் ஹோட்டலும் அவர் நடத்தி வந்ததால் முஜிபுர் ரஹ்மானின் ஹோட்டலில் இருந்து தான் உணவுகள் விஜயகாந்த் குடும்பத்திற்கு செல்லும்.

 Vijayakanth is family loses 15 years of faith ... Premalatha feeling

கடந்த 15 ஆண்டுகளாக இது தொடர்ந்து வந்தது. ஆனால் இந்தமுறை பிரேமலதா மதுரை சென்றபோது வரவேற்க முஜிபுர்ரஹ்மான் இல்லாதது கண்டு பிரேமலதா கண்கலங்கி அழுது விட்டாராம். அருகில் இருந்தவர்கள் ஆறுதல் சொல்லி இருக்கிறார்கள். பிறகு கொரோனாவால் இறந்தவர்களின் வீடு தேடி போய் ஆறுதல் சொல்லி, முஜிபுர்ரகுமான், சிவமுத்துக்குமரன் குடும்பத்தினருக்கு தலா, 3 லட்சமும், மற்ற ஐந்து பேர் குடும்பத்துக்கு தலா, 25 ஆயிரம் ரூபாயையும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் பிரேமலதா. 

Follow Us:
Download App:
  • android
  • ios