நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக  போராட்டம் நடத்தி வரும் மக்களை சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹெட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதனால் விவசாயம் பாதிக்கும் எனவும் நிலத்தடி நீர் பாதிக்கும் எனவும், அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதைதொடர்ந்து அப்பகுதி மக்கள் 2 கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் இந்த போராட்டம் 103 வது நாளாக தொடர்கிறது.

இதேபோல் கதிரமங்கலத்திலும் ஒஎன்ஜிசி நிறுவத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அதேபோல், இன்று விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும், நெடுவாசலுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.