கடந்த 23ஆம் தேதி நடந்த வன்முறையில் அதிகம் பாதிக்கப்பட்டது மெரீனா நடுக்குப்பம். கடைகள் கொளுத்தப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
அரசியல் கட்சிகள்,தமிழக அரசு வந்து வேடிக்கை பார்த்து ஆறுதல் சொன்னார்களே தவிர வேறு எதுவும் செய்யவில்லை.
ஆனால் விஜயகாந்த் சம்பிரதாயத்துக்கு வராமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களும் கொடுத்து உதவினார்.
கடந்த 23ஆம் தேதி நடந்த ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை பெரிதாக வெடித்ததில் நடுக்குப்பம் பகுதி கடுமையாக பாதிக்கபட்டது.

நடுக்குப்பம் மீன் மார்கேட் தீ வைத்து எரிக்கப்பட்டது.
மீன் வியாபாரத்தை நம்பி வாழும் மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அந்த பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுடன் வந்து பார்வையிட்டு ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார்.
இதே போன்று மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, மக்கள் நல கூட்டணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.ஆனால் இவர்களில் ஒருவர் கூட அந்த பகுதி மக்களின் உடனடி தேவையறிந்து உதவவில்லை.
நடுக்குப்பம் பகுதி அடங்கியுள்ள திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ என்ற முறையில் சிறு உதவி கூட செய்யவில்லை. வந்தார் பார்த்தார் சென்றார்.

ஆனால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று நடுக்குப்பத்துக்கு வந்தார்.
மற்ற அரசியல் கட்சி தலைவர்களை போல் வெறும் கையை வீசி கொண்டு வராமல் ஒரு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், அரிசி, மற்றும் மீன் வியாபாரம் செய்யும் மக்கள் என்பதால் மீன்களை வைக்கும் ஐஸ் பெட்டி, முதலியவற்றை அங்குள்ள மக்களுக்கு வழங்கினார்.

இது பற்றி மீனவ் பெண் ஒருவர் குறிப்பிடுகையில்
"அமைச்சர் வந்தாரு, வாக்குறுதி குடுத்தாரு, ஸ்டாலின் வந்தாரு எல்லாத்தையும் கேட்டுட்டு கெளம்பிட்டாரு...

எங்க தொகுதி எம்எல்ஏ அன்பழகன் ஸ்டாலின் கூடவே வந்தாரு. கூடவே போயிட்டாரு.. லாரன்ஸ் தம்பி மட்டும் பணம் வசூல் செய்து கடைகள் கட்டி தர 10 லட்சம் தருவதாக சொல்லுச்சி.. இப்ப கேப்டன் விஜயகாந்த் மற்ற தலைவர்கள் மாதிரி வந்துட்டு போகாம எங்க கஷ்டத்த பாத்து தேவைப்பட்டத கொடுத்துட்டு போனாரு" என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
ஆளுங்கட்சியோ எதிர்கட்சியோ இல்லாமல் இருந்தாலும் பாதிக்கபட்டவர்கள் எது தேவை என்று உணர்ந்து உதவி செய்யும் கேப்டன் கேப்டன் தான் என்று இதை பார்த்த ஒரு மீனவர் தெரிவித்தார்.
