Asianet News TamilAsianet News Tamil

மக்களை காக்கும் தேவதைகள் நீங்கள்..! செவிலியர்களுக்கு தலைவணங்கிய விஜயகாந்த்..!

செவிலியர் பணி என்பது தொழில் அல்ல! ஊதியம், ஜாதி,மதத்திற்கு அப்பாற்பட்டு,தாய்க்கு நிகரான பரிவையும், சகிப்புத்தன்மையும் கொண்டு தொண்டு ஆற்றும் மகத்தான சேவையாகும். உலகமெங்கும் கொரோனா பரவியிருக்கும் இந்த காலகட்டத்தில்,  மக்களை காக்கும் நைட்டிங்கேல்களாக,தேவதைகளாக  ஒவ்வொரு செவிலியரும், இரவு  பகல் பாராமல் தங்கள் குடும்பங்களை கூட கவனிக்காமல்  நோயாளிகளுக்காக பணியாற்றி வருகிறார்கள்.

vijayakanth greets on international nurses day
Author
Tamil Nadu, First Published May 12, 2020, 12:08 PM IST

இன்று சர்வதேச செவிலியர் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. செவிலியர்களின் எடுத்துக்காட்டாக விளங்கும் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200வது பிறந்த ஆண்டையொட்டி இந்த வருடம் செவிலியர் மற்றும் தாதியர் உலக ஆண்டாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா வைரஸிற்கு எதிராக தற்போது உலகமெங்கும் நடந்து வரும் போரில் மருத்துவ துறையில் முக்கிய பங்காற்றும் செவிலியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து தன்னலமற்ற சேவை புரிந்து வருகின்றனர். அவர்களை உலக மக்கள் அனைவரும் போற்றி கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில் இன்று கொண்டாடப்படும் சர்வதேச செவிலியர் தினத்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

vijayakanth greets on international nurses day

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் செவிலியர்களின் தன்னலமற்ற சேவைக்கு தலைவணங்குவதாக வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், நவீன செவிலியத்தை உருவாக்கிய பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான  மே 12 ஆம் தேதியை, உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. செவிலியர் பணி என்பது தொழில் அல்ல! ஊதியம், ஜாதி,மதத்திற்கு அப்பாற்பட்டு,தாய்க்கு நிகரான பரிவையும், சகிப்புத்தன்மையும் கொண்டு தொண்டு ஆற்றும் மகத்தான சேவையாகும். உலகமெங்கும் கொரோனா பரவியிருக்கும் இந்த காலகட்டத்தில்,  மக்களை காக்கும் நைட்டிங்கேல்களாக,தேவதைகளாக  ஒவ்வொரு செவிலியரும், இரவு  பகல் பாராமல் தங்கள் குடும்பங்களை கூட கவனிக்காமல்  நோயாளிகளுக்காக பணியாற்றி வருகிறார்கள்.

 

இந்த பணியானது, எந்த ஒரு செயலுக்கும் ஒப்பிட்டு பார்க்க முடியாத ஒரு சேவையாகும். இத்தகைய சேவையை போற்றி தலை வணங்குகிறேன். மேலும், உலக செவிலியர் தினத்தில் செவிலியர்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios