Asianet News TamilAsianet News Tamil

அமெரிக்காவில் விஜயகாந்துக்கு நடக்கவிருக்கும் கிட்னி ஆபரேசன்...

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் குன்றி சிகிச்சை எடுத்து வருகிறார். குறிப்பாக அவரது பார்வை மங்கல் பெரும் பிரச்சினையாக இருந்தது. இதற்காக சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் மேல் சிகிச்சைக்காக டிசம்பர் மத்தியில் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார்.
 
vijayakanth facing kidney transplantation
Author
USA, First Published Jan 4, 2019, 1:57 PM IST

டிசம்பர் இரண்டாவது மாதம் முதல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த்தின் உடல்நலம் குறித்து குழப்பமான தகவல்கள் பரவி வரும் நிலையில் அவருக்கு விரைவில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வருகின்றன.vijayakanth facing kidney transplantation

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் குன்றி சிகிச்சை எடுத்து வருகிறார். குறிப்பாக அவரது பார்வை மங்கல் பெரும் பிரச்சினையாக இருந்தது. இதற்காக சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் மேல் சிகிச்சைக்காக டிசம்பர் மத்தியில் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு நண்பர் ஒரு வீட்டில் தங்கி விஜயகாந்த் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் செய்திகள் பரவின. இதற்கு உரிய விளக்கம் எதுவும் தராத பிரேமலதா கிறிஸ்துமஸ் தினத்தன்று நண்பர்களுடன் ஒரு ஹோட்டல் லாபியில் சிரித்தபடி இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை மட்டும் வெளியிட்டார்.vijayakanth facing kidney transplantation

இந்நிலையில் நேற்று இரவு பரவிய செய்தி ஒன்றில் விஜயகாந்துக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடக்கவிருப்பதாகவும், அவரது உடல் ஏற்றுக்கொள்ளும் வகை குரூப்பைச் சேர்ந்த கிட்னி தற்போதுதான் கிடைத்துள்ளதாகவும், சிகிச்சை முடிந்து மார்ச் அல்லது ஏப்ரலில்தான் விஜயகாந்த் சென்னை வருவார் என்றும் தெரிவிக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios