தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு கடந்த மாதம் செப்டம்பர் 22 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மடிப்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் 24 ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இதைதொடர்ந்து அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இருவரும் குணம் அடைந்து மருத்துவமனையில்  இருந்து கடந்த 2ந்தேதி  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

இந்நிலையில் விஜயகாந்துக்கு அக்டோபர் 6 ஆம் தேதி ஆண்டு  மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது இவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக மருத்துமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில்... திரு. விஜயகாந்த் தேமுதிக நிறுவனத்தலைவர் மற்றும் கழக பொதுச்செயலாளர் அவர்களின் மருத்துவ நிலை அறிக்கை. திரு. விஜயகாந்த் அவர்கள் மருத்துவ குழுவின் தொடர் கண்காணிப்பின் மூலம், அனைத்து கதிரியக்கப் பரிசோதனையில் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றமடைத்ததையடுத்து, அவர் இன்று சென்னை, மியாட் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். என தெரிவித்துள்ளனர். இந்த தகவல் விஜயகாந்தின் ரசிகர்கள் மற்றும், தேமுதிக தொண்டர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.