ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை போக்குவர்த்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் இன்று நடைபெற்றது.இதில் போக்குவரத்து ஊழியர்களின் 47 சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும் எனவும், தமிழகத்தில் மட்டுமே போக்குவரத்து துறை சிறந்த சேவையை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் எனவும் தமிழகத்தில் மட்டுமே குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவை வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்