தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் தற்போது வரை தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாகவே தேமுதிக கட்சி நடவடிக்கைகளில் விஜய பிரபாகரன் தீவிரம் காட்டி வருகிறார். பொதுக்கூட்டங்கள் பேரணிகள் நிர்வாகிகளுடன் சந்திப்பு என்று தேமுதிக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விஜய பிரபாகரன் செயல்பட்டு வருகிறார். பொதுக்கூட்டங்களில் திமுக மற்றும் அதிமுக தலைமையை விஜய பிரபாகரன் விமர்சித்துப் பேசுவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

உடல்நலம் பாதிக்கப்பட்டு கேப்டன் வீட்டில் சிகிச்சையில் இருக்கும் நிலையில் அவரது மகன் விஜய பிரபாகரன் தேமுதிகவின் முக்கியப் பேச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்தது அக்கட்சியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விஜய பிரபாகரன் தேர்தல் பிரச்சாரத்தில் பம்பரமாகச் சுழல்வார் என்று அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பிரச்சாரம் தீவிரமடைந்து விரைவில் முடிவடைய உள்ள நிலையிலும் விஜய பிரபாகரன் பிரச்சாரத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார். 

இதற்கு காரணம் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைப்பதில் விஜய பிரபாகரன் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார்கள். தனது தந்தையைப் போலவே தேமுதிக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று துவக்கம் முதலே சுதீஷ் மற்றும் பிரேமலதாவிடம் விஜய பிரபாகரன் வலியுறுத்தி வந்ததாக சொல்கிறார்கள். இதனைக் கேட்டு பீதியான சுதீஷ் விஜய பிரபாகரனிடம் பேசாமலே தவிர்த்து கூட்டணியை இறுதி செய்து தற்போது கள்ளக்குறிச்சியில் தீவிரமாக களம் ஆடி வருகிறார். 

ஆனால் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் நான்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விஜய பிரபாகரன் தங்கள் தொகுதியில் பிரச்சாரத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று பிரேமலதாவிடம் கூறி வருகின்றனர். ஆனால் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள நமது வேட்பாளர்களை ஆதரித்து என்னால் பிரச்சாரம் செய்ய முடியாது என்று விஜய பிரபாகரன் பிடிவாதம் பிடிப்பதாக சொல்லப்படுகிறது. எனவே விஜய பிரபாகரனை பிரேமலதா சமாதானம் செய்து பிரச்சாரத்திற்கு கொண்டுவருவதற்கான வேலைகளில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அப்படியே தன் பிரச்சாரத்திற்கு வந்தாலும் அதிமுகவினரிடம் பேசமாட்டேன் அவர்கள் இருக்கும் மேடையில் ஏற மாட்டேன் என்கிற ரீதியில் குட்டி கேப்டன் நிபந்தனை விதிப்பது பிரேமலதா கடும் எரிச்சல் அடைந்து உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அரசியலில் நெழிவு சுளிவு தெரியாததால்தான் தேமுதிக தற்போது இந்த நிலையில் உள்ளது என்பதை எடுத்துக் கூறி சின்ன கேப்டனை பிரச்சாரத்திற்கு பிரேமலதா எப்படியும் அழைத்து வந்து விடுவார் என்கிறார்கள் தேமுதிகவினர்.