தேமுதிக ஓட்டு சதவீதம் குறைந்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இதற்கு காரணமே அரசியல் சூழ்ச்சிதான். தமிழக அரசியல் என்பது தேமுதிகவை சுற்றித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இதை யாருமே ஏன் பேசுவதே இல்லை? தேமுதிக கூட்டணியில் இல்லாததால் அதிமுக, எதிர்க்கட்சியாகிவிட்டது என்பதை அந்த கட்சியினரே ஒப்புக் கொள்கின்றனர்.
தேமுதிக கட்சி முன்ன மாதிரி இல்லை. கூட்டம் கம்மியாக இருக்கிறது என்பவர்கள் செவிட்டில் தான் வைக்கணும் என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் விஜய பிரபாகரன் பேசியுள்ளார்.
கும்பகோணத்தில் தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது, நிகழ்ச்சியில் பேசிய விஜய பிரபாகரன்;- விஜயகாந்த் குரல் தமிழ்நாடு முழுக்க என்றும் ஒலித்துக்கொண்டிருக்கும். கும்பகோணத்தில் நான் முன்பு பேசியதுதான் சர்ச்சையானது. அன்று பேசிய பேச்சுக்கு எல்லா அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும பதில் கொடுத்தனர். தேமுதிக கட்சி முன்ன மாதிரி இல்லை. கூட்டம் கம்மியாக இருக்கிறது என்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் கூட்டம் அதிகரித்து தான் வருகிறது. இப்படி கேட்பவர்கள் செவிட்டில் தான் வைக்கணும் என்று தோன்றுகிறது என்றார்.

தேமுதிக ஓட்டு சதவீதம் குறைந்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இதற்கு காரணமே அரசியல் சூழ்ச்சிதான். தமிழக அரசியல் என்பது தேமுதிகவை சுற்றித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இதை யாருமே ஏன் பேசுவதே இல்லை? தேமுதிக கூட்டணியில் இல்லாததால் அதிமுக, எதிர்க்கட்சியாகிவிட்டது என்பதை அந்த கட்சியினரே ஒப்புக் கொள்கின்றனர்.

விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாததால் வெளியில் வராமல் இருக்கலாம். குகையில் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான். எனது அப்பா எந்த சொத்தும் தர வேண்டாம். நீங்கள் தான் எனது அப்பா சம்பாதித்த சொத்து. நீங்கள் கடைசி வரை என்னுடன் இருந்தால் போதும். தேமுதிகவின் பலம் கூடும். மீண்டெழும் என விஜய பிரபாகரன் ஆவேசமாக பேசியுள்ளார். தேமுதிக கட்சி முன்ன மாதிரி இல்லை. கூட்டம் கம்மியாக இருக்கிறது என்பவர்கள் செவிட்டில் தான் வைக்கணும் என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.