vijaya kanth speak about tn ministers
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது வாயைப் பொத்திக் கொண்ருந்த கமலஹாசன் இப்போது மட்டும் பேசுவது ஏன் என அமைச்சர்கள் கேள்வி கேட்கிறார்களே, நீங்களும் ஜெயலலிதா இருந்தபோது வாயை மூடிக்கொண்டுதானே இருந்தீர்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசலில் போராட்டம் நடத்தி வரும் மக்களை சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால், அதுகுறித்து எனக்கு கவலையில்லை என்று தெரிவித்தார்
மக்கள் வேண்டாம் என்று சொல்லும் திட்டத்தை அரசு ஏன் கொண்டு வர வேண்டும் என கேள்வி எழுப்பிய விஜயகாந்த், தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்..
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது வாயைப் பொத்திக் கொண்ருந்த கமலஹாசன் இப்போது மட்டும் பேசுவது ஏன் என அமைச்சர்கள் கேள்வி கேட்கிறார்களே, நீங்களும் ஜெயலலிதா இருந்தபோது வாயை மூடிக்கொண்டுதானே இருந்தீர்கள் என தெரிவித்தார்.
