Asianet News TamilAsianet News Tamil

தமிழினத் துரோகி முத்தையா முரளிதரன் கேரக்டர்ல நடிக்காதீங்க... விஜய் சேதுபதிக்கு விசிக வேண்டுகோள்..!

முத்தையா முரளிதரன் ஒரு தமிழின துரோகி. அவர் பாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 

Vijay Sethupathi's special request for VCK
Author
Tamil Nadu, First Published Jul 26, 2019, 6:34 PM IST

முத்தையா முரளிதரன் ஒரு தமிழின துரோகி. அவர் பாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளார். Vijay Sethupathi's special request for VCK

நடிகர் விஜய்சேதுபதி இலங்கை விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு அதிர்ச்சியை தந்துள்ளது. வருத்தத்தை தருகிறது.  நடிகர் விஜய் சேதுபதி சிறந்த நடிகர்.  பண்பாடு மிக்க, மனித நேயமிக்க
 மனிதர். நடிப்பு அவரது தொழிலாக இருந்தாலும்  சமூக அக்கறையோடும் தமிழின உணர்வோடும் செயல்படுபவர். அப்படிப்பட்டவர் முத்தையா முரளிதரன் போன்ற ராஜபக்சேவின் அடிமையின் கதாபாத்திரத்தில் நடிப்பது வேதனை அளிக்கிறது. Vijay Sethupathi's special request for VCK

முத்துயா முரளிதரன் கன்டியில் பிறந்து தமிழராக இருந்தாலும் ஒரு சிங்களராகவே வாழ்ந்து வருபவர். தமிழர் என்று சொல்வதில் அவமானப்படுபவர். சில ஆண்டுகளுக்கு முன்னால், கொழும்பு கொச்சிக்கடையில் வைத்து தமிழ் இளைஞர்களிடம் முரளி 'தனக்கு தமிழ் தெரியாது" என்று சிங்களத்தில் உரையாடிய போது ஆத்திரம் அடைந்த தமிழ் இளைஞர்கள் முத்தையா முரளியை தாக்க முற்பட்டார்கள் என்பதெல்லாம் தனி வரலாறு.


சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக விடுதலைப்புலிகள் போராடிக் கொண்டிருந்த போது  சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்து வருபவர். 
இதை விட கொடுமை தமிழினப்படுகொலைக்கு பிறகு பாதிக்கப்பட்ட தமிழ் கிராமங்களுக்கு போகாமல், சிங்கள கிராமங்களுக்கு போய் ஆறுதல் சொன்னவர். அது மட்டுமல்லாது, தென்னிலங்கையில் சிங்களவர்கள் மட்டுமே வசிக்கும் 'தங்கல்லை" என்ற இடத்தில் இரண்டு சிங்கள கிராமங்களை தத்தெடுத்து இருக்கிறார்.Vijay Sethupathi's special request for VCK

 லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்தபிறகு,   “அமைதியை நிலைநிறுத்திய ராஜபக்சே” என்று முத்தையா முரளிதரன் பாராட்டினார். இனப்படுகொலை நடத்திய ஒரு குற்றவாளிக்கு உறுதுணையாய் இருக்க கூடிய துரோகி முரளிதரனின் கதாபாத்திரத்தில் தமிழர்களால் அதிகம் நேசிக்ககூடிய விஜய் சேதுபதி போன்ற சிறந்த நடிகர் நடிப்பதை ஈழத்தமிழர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள். ஒரு தமிழினத்துரோகியை உலக அரங்கில் அடுத்த தலைமுறைக்கு  நல்லவனாக- நாயகனாக காட்ட முயற்சிப்பது வரலாற்று 
பிழையாகத்தான் முடியும்’’ என அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios