Asianet News TamilAsianet News Tamil

இன்னும் 28 நாட்களுக்குள் இந்தியா வந்து சேருவாரா விஜய் மல்லையா? இன்று விசாரணை...

இந்தியாவுக்கு இன்னும் 28 நாட்களுக்குள் விஜய் மல்லையா திருப்பி அனுப்பப்படுவாரா என்கிற கேள்விக்கு இன்ன்னும் சில மணி நேரங்களில் விடை தெரிந்துவிடும். தன்னை  நாடு கடத்த எதிர்ப்பு தெரிவித்து விஜய் மல்லையா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது

vijay mallaiya case today in london
Author
London, First Published Jul 2, 2019, 10:58 AM IST

இந்தியாவுக்கு இன்னும் 28 நாட்களுக்குள் விஜய் மல்லையா திருப்பி அனுப்பப்படுவாரா என்கிற கேள்விக்கு இன்ன்னும் சில மணி நேரங்களில் விடை தெரிந்துவிடும். தன்னை  நாடு கடத்த எதிர்ப்பு தெரிவித்து விஜய் மல்லையா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது.vijay mallaiya case today in london

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையா அங்கு ஜாலியாக ஊர் சுற்ரிக்கொண்டிருக்கிறார். அவரை  நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஜார்ஜ் லெக்காட், ஆண்ட்ரூ போப்பிள்வெல் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு முன் இன்று விசாரணை நடைபெறவுள்ளது. நாள் முழுவதும் நடைபெறும் இந்த விசாரணையின்போது, இந்திய அரசு மற்றும் மல்லையா தரப்பு வக்கீல்கள் கூடுதல் வாதங்களை முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.vijay mallaiya case today in london

 இந்த விசாரணையைத் தொடர்ந்து, மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைக்கவே அதிக  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது எனினும் ஒருவேளை மல்லையாவின் மனு நிராகரிக்கப்படும் பட்சத்தில், அந்த தீர்ப்பு வெளியான 28 நாள்களுக்குள் அவர் நாடு கடத்தப்பட வேண்டும். அதேசமயம், அவரது மனு ஏற்கப்பட்டால், உயர்நீதிமன்றத்தில் விரிவாக விசாரணை நடைபெறும்.

Follow Us:
Download App:
  • android
  • ios