Chennai Election Results 2022 : சென்னை மாநகராட்சி 136வது வார்டில் 5,112 வாக்குகளைப் பெற்று 2ம் இடம் பிடித்த விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் அறிவுச்செல்வி...

வழக்கம் போல சென்னை திமுகவின் கோட்டை என்பதை ஸ்டாலின் நிரூபித்துக் காட்டியுள்ளார். தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மொத்தம் 200 வார்டுகளில் 50 வார்டுகளை கைப்பற்றி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியுள்ளது..

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகளில் 150 வார்டுகளுக்குமேல் கைப்பற்றுவோம் என திமுகவினர் நம்பிக்கை தெரிவித்து வந்த நிலையில், அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி மொத்தம் 200 வார்டுகளில் இதுவரை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

அந்தவகையில் சென்னையில், திமுக சார்பில் சென்னை மாநகராட்சி 136 வது வார்டில் போட்டியிட்ட 22 வயது இளம் வேட்பாளர் நிலவரசி துரைராஜ் 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் அறிவுச்செல்வி 5,112 வாக்குகளைப் பெற்று 2ம் இடம் பிடித்துள்ளார்..ஈவர் பெற்றுள்ள வாக்குகள் அதிமுக வேட்பாளரை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது...