Asianet News TamilAsianet News Tamil

எம்.ஜி.ஆர் விழாவை மறக்க வைத்த விஜய், கமல்! திட்டமிட்டே செய்யப்பட்டதா?

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை மறக்க வைக்கும் விதமாக  விஜயும், கமலும் களமிறங்கியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை கிளப்பியுள்ளது. 

Vijay and kamal beat MGR ceremony
Author
Chennai, First Published Oct 1, 2018, 1:43 PM IST

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை மறக்க வைக்கும் விதமாக  விஜயும், கமலும் களமிறங்கியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை கிளப்பியுள்ளது. அதிமுக சார்பாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிரமாண்டமாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று நடந்தது. கோடிக்கணக்கில் வாரி இறைத்து நடத்தப்பட்ட இந்த அரசு விழாவை மறக்கடிக்கும் விதமாக சினிமா பாடல் வெளியீட்டு, மற்றும் பிக் பாஸின் கடைசி நாளான போட்டியாளர் அறிவிப்பு என அடுத்தடுத்து வெளியாகி கவனத்தை சிதறடித்துள்ளது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துவரும் படம் சர்கார். அக்டோபர் 2ஆம் தேதி படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து ஏற்கெனவே ஒரு பாடல் வெளியிடப்பட்டுவிட்டது.  

Vijay and kamal beat MGR ceremony

இந்த நிலையில் இதிலிருந்து இரண்டாவது பாடல் நேற்று வெளியாகியுள்ளது. 'ஒருவிரல் புரட்சியே' எனத் தொடங்கும் இந்தப் பாடலை விவேக் எழுத, இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். தேர்தல் அரசியலை மையப்படுத்தி வெளியாகியுள்ள இந்தப் பாடல் தற்போது இணையத்தில் கவனம்பெற்று வருகிறது. ஏ. ஆர்.ரஹ்மானுடன் ஸ்ரீநிதி வெங்கடேஷ் இணைந்து இதைப் பாடியுள்ளார்.

Vijay and kamal beat MGR ceremony

முன்னதாக இதன் சிங்கிள் ட்ராக் வெளியிட்டபோது அதுகுறித்து படக்குழு சார்பாக முன்கூட்டியே தொடர்ச்சியாகப் பல அறிவிப்புகள் வந்தன. ஆனால், இந்தப் பாடலுக்குப் பெரிய அளவிலான எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீர் முடிவுடன் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரவலாகக் கூறப்படுகிறது. இந்த நகர்வுதான் தற்போது புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

Vijay and kamal beat MGR ceremony

அதாவது, அதே போல அந்த நாளில் தான் தனது அரசியலை ஆழப்படுத்த, தான் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளிலும் பங்கேற்றார் கமல். அரசியல் முக்கியத்துவம் கொண்ட இந்த இரு நிகழ்வுகளும் பெருத்த கவனம் பெறும் எனும் காரணத்தால்தான் அதே நாளில் போட்டியாக அரசியலை மையப்படுத்திய பாடல் வெளியிடப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. எது எப்படியோ சர்கார் ரசிகர்களுக்கு இந்தப் பாடல், மற்றும் பிக் பாஸ் கடைசி நாள் விழா என ஒரு வீக் எண்டு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios