நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது , இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 46 ஆயிரத்து 476 ஆக உயர்ந்துள்ளது ,  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1571 ஆக அதிகரித்துள்ளது , இதுவரை சுமார் 12,649 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் ,  இந்நிலையில் நாட்டிலேயே கொரோனா வைரசை மிக வேகமாக கட்டுப்படுத்திய மாநிலம் என்ற பெருமையை கேரள பெற்றுள்ள நிலையில், கேரள அரசை சர்வதேச நாடுகள் பாராட்டி வருகின்றன ,  இந்நிலையில் கொள்ளை நோயான  கொரோனாவை தடுப்பதில் மனிதநேய அணுகுமுறையுடன்  பயனுள்ள விதத்தில் கேரளா செயல்பட்டதாக   வியட்நாம் கம்யூனிஸ்டு கட்சி பாராட்டியுள்ளது.  இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக கேரளம் நடத்துகிற போராட்டம் விரிவான அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது என்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவுக்கு வியட்நாம் கடிதமொன்று எழுதியுள்ளது. 

அதில் வியட்நாம் வெளியுறவு பிரிவின் தலைவர் ஹூவாங் பின் க்வான் கேரளாவை வெகுவாக பாராட்டினார் ,  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு எல்லா இடதுசாரி முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலூக்கம் உள்ள நடவடிக்கைகள் மேற்கொள்வதை நாங்கள் கவனித்து வருகிறோம் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்வதற்கு உழைக்கும் வெகு ஜனங்களின் வறுமையை போக்க அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு சிபிஎம் தொடர்ந்து பாடுபடுகிறது ,  இது உலகெங்கும் உள்ள அரசியல் கட்சிகளுக்கு பெரும் ஊக்கம் ஊட்டுவதாகவும் இதிலிருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்றும் இந்நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களிடம் தங்கள் பொறுப்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற உணர்வு வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது 

கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தம் உட்பட பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து நிற்பதற்காக தயார் நிலையையும் , அக்கறையையும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக்கொள்கிறது என அந்த கடிதத்தில் வியட்நாம் கூறியுள்ளது, அதாவது  தன் சிறப்பான நடவடிக்கைகள் மூலம்  கொரோனாவை தங்கள் நாட்டில் முற்றிலுமாக வியட்நாம் கட்டுப்படுத்தியிருப்பது அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.  இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் நிகழ்வுகளில் வியட்நாம் பங்குபெற வேண்டும் என்றும், கொரோனாவை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பது குறித்து உலக நாடுகளுக்கும் வியட்நாம் வழிகாட்ட வேண்டும், அதற்கு அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது  என அமெரிக்கா வியட்நாமை பாரட்டியுள்ள நிலையில் வியட்நாம் கேரளாவை பாரட்டி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.