அதுமட்டுமல்ல, வீடியோ அனுப்பிய 2 பேருக்கும் 15 நாட்களில், தான் கொடுக்க போகும் அந்த விபரீத தண்டனைக்காக வீர தீர செயல்களுக்கான விருதையும் தனக்கு வழங்க வேண்டும்
ராமாபுரத்தை சேர்ந்தவர் வீரலட்சுமி. இவர் தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பின் நிறுவனர். இவர், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் “மை இந்தியா பார்ட்டி”சார்பிலும் போட்டியிட்டவர்.

தேர்தல் சமயத்தில், இவரது வாட்ஸ்அப் நம்பருக்கு ஆபாச வீடியோக்கள் மர்ம நபர் யாரோ அனுப்பியுள்ளனர். இது குறித்து வீரலட்சுமி, போலீசில் புகார் அளித்து இருந்தார். போலீசாரும் பதிவு செய்து விசாரிணை மேற்கொண்டு வந்தனர். அப்போது சிறிது நாளில் மறுபடியும் வீரலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் “எனக்கு இப்படி ஆபாச வீடியோ அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை. அவரை 3 நாட்களில் போலீசார் கைது செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் நானே அந்த நபரை கண்டுபிடித்து, தூக்கிட்டு வந்து நிர்வாணமாக பல்லாவரம் மார்க்கெட்டில் கட்டி வைத்து, பிறப்புறுப்பையும் அறுத்து, சோஷியல் மீடியாவிலும் வெளியிடுவேன்” என மிரட்டல் விடுத்திருந்தார். இதனால் உச்சக்கட்ட ஆத்திரத்துக்கு போன அவர் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், கையில் அரிவாளை எடுத்து “ஏற்கனவே இதுபோல சம்பவங்களில் புகார் தந்தேன். ஆனால் போலீசார் எதுவுமே நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது வீடியோ அனுப்பிய நபர்கள் தானாகவே 15 நாட்களுக்குள் போலீசில் சரணடையாவிட்டால், அரபி நாடுகளில் பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படுவதாக சொல்லப்படும் அந்த மாதிரி தண்டனை ஒன்றை வழங்க போகிறேன்” என்று எச்சரித்து இருந்தார்.

அதுமட்டுமல்ல, வீடியோ அனுப்பிய 2 பேருக்கும் 15 நாட்களில், தான் கொடுக்க போகும் அந்த விபரீத தண்டனைக்காக வீர தீர செயல்களுக்கான விருதையும் தனக்கு வழங்க வேண்டும் என்று அரிவாளுடன் பேசியுள்ளார் வீரலட்சுமி. ஏற்கனவே நிர்வாணமாக்கி, பிறப்புறுப்பை கட் செய்வதாக சொல்லி இருந்தார் வீரலட்சுமி. இப்போது அரபு நாட்டு தண்டனை என்று கையில் அரிவாளை வைத்து கொண்டு ரெடியாக நிற்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’எனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியவன் யார் எனக் கண்டுபிடித்து விட்டேன். அவன் கடந்த 2 நாட்களாக எங்கே போகிறான். வருகிறான் என்பதையெல்லாம் கண்காணித்து வருகிறோம். காவல்துறை அவன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரிவாளை எடுத்து அவனது ஆணுறுப்பை அருத்து அந்த வீடியோவை சமூவலைதளத்தில் வெளியிடுவேன். ஆபாச வீடியோ அனுப்பிய குழு தலைவனையே நாங்கள் கண்டுப்பிடித்துவிட்டோம்.
எனக்கும் அவர்களுக்கும் எந்த ஒரு தனி பகையும் இல்லாமல் ஏன் ஆபாச வீடியோ அனுப்பி எனக்கு தொல்லை தர வேண்டும் என்று ஆராயும் பொழுது மூன்று காரணங்கள் அறியப்படுகிறது. நான் வன்னியர் பெண் என்பதாலும் எந்நேரமும் நான் திருநீரு பொட்டு வைப்பதும் என்னுடைய வீரலட்சுமி என்ற பெயரும் தான் அவர்களுக்கு வெருப்புணர்வு ஏற்ப்படுத்தியுள்ளது. ஆனால் எந்த மக்களும் எந்த மதத்தினரும் புண்ப்படுத்த வேண்டும் என்ற வெருப்பு அரசியலை நான் எந்த நேரத்திலும் முன்னெடுத்ததில்லை.
மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பில் 18 வயதில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து 33 வயது வரை வெற்றி கரமாக அரசியல் களத்தில் பொது வாழ்க்கையில் பயனம் செய்துக்கொண்டிருக்கிறேன்.இரண்டு முறை கூட்டணி அமைத்து சட்டபேரவை தேர்தல் சந்தித்த சுதந்திர இந்தியாவில் ஒரே பெண் தலைவர் நான் மட்டுமே.
எனவே எனக்கும், அடுத்து வரும் பெண்களுக்கு இது போன்ற துன்புறுத்தல் நடக்காமல் இருக்க இதை ஆரம்பத்திலே கில்லி எரிய வேண்டும் என்ற காரணத்திற்காக சம்மந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என வீரமட்சுமி தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
