கொரோனா, ஒமைக்ரான் பரவிவரும் நிலையில் தேர்தல் நடத்துவது மிகவும் சவாலான காரியம் எனவும் கொரோனா அதிகரிக்காத வகையில் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவது தான் தேர்தல் ஆணையத்தின் முதல் முன்னுரிமை என்றார், 5 மாநிலங்களில் முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 24.9 லட்சமாக உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தபால் வாக்களிக்கலாம் தேர்தல் ஆணையர் அதிரடி அறிவித்துள்ளது. அதேபோல் தொற்று காரணமாக வேட்பாளர்கள் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வரவேண்டும் என்றும் தேர்தல் ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்ரகாண்ட், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும், உத்தரகாண்ட் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் தலைமை தேர்தல் அதிகாரி சுசில் சந்திரா செய்தியாளரை சந்தித்தார் அப்போது பேசிய அவர் 5 மாநிலங்களில் 18.34 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக கூறினார்.
கொரோனா, ஒமைக்ரான் பரவிவரும் நிலையில் தேர்தல் நடத்துவது மிகவும் சவாலான காரியம் எனவும் கொரோனா அதிகரிக்காத வகையில் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவது தான் தேர்தல் ஆணையத்தின் முதல் முன்னுரிமை என்றார், 5 மாநிலங்களில் முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 24.9 லட்சமாக உள்ளது. என்றும் கொரோனா காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் சுஷீல் சந்திரா கூறினார். எனவே ஒரு வாக்குச் சாவடியில் 1250 முதல் 1500 பேர் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வாக்குச்சாவடியில் எண்ணிக்கை 2.16 லட்சம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
80 வயது முதியோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம், கொரோனா தொற்று பரவல் காரணமாக வேட்பாளர்கள் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வரவேண்டும் என்று வலியுறுத்திய அவர், முதல்முறை வாக்களிக்கும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 11.4 லட்சம் என அறிவித்தார்.
