vetrivel mla replies to thambidurai
குடியரசு தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து சசிகலா விரைவில் அறிவிப்பார் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த், இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் மீரா குமார் போட்டியிடுகிறார். இன்னும் சில நாட்களில் மீரா குமாரும், வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், இன்று காலை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சசிகலா மற்றும் முதலமைச்சர் பழனிச்சாமி ஆகியோர் எடுத்த முடிவுதான் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, குடியரசு தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து சசிகலா விரைவில் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.
கட்சி பொறுப்பில் சசிகலா, தினகரனுக்கு அடுத்த இடத்திலேயே முதலமைச்சர் பழனிசாமி உள்ளதாகவும் வெற்றிவேல் கூறினார்.
