எங்களை பகைத்துக் கொண்டால் ஆட்சியில் தொடர முடியாது என எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்த வெற்றிவேல் எம்எல்ஏ, நாங்கள் நினைத்திருந்தால் ஓபிஎஸ்  அணிக்கோ அல்லது திமுகவிற்கோ ஆதரவாக இருந்திருக்கலாம் என அதிர்ச்சி ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. ஆனால் சசிகலா அணியில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனி அணியாக பிரிந்து டி.டி.வி.தினகரனுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிட்ம் பேசிய டி.டி.வி.அணியின் எம்எல்ஏ வெற்றிவேல், பபிறகுமூன்றாக பிரிந்திருக்கும் அதிமுகவின் தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் எம் எல் ஏ , முதலமைச்சர்  எடப்பாடி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டுமானால் அவர்கள் அணியை பகைத்துக்கொள்ளக் கூடாது என எச்சரிக்கை விடுத்தார். 

ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்றுதான் நம்பிக்கை வாக்குக் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவளித்தோம். நாங்கள் நினைத்திருந்தால் ஓ பன்னீர் செல்வம் அணிக்கோ அல்லது திமுகவிற்கோ ஆதரவாக இருந்திருக்கலாம் என்றும்  கூறி செய்தியாளர்களை அதிர வைத்தார்.