Vetrivel is warning edappadi
அதிமுக எம்.பி. கோ. அரி உத்தமசீலன் பேசக் கூடாது என்று டிடிவி தினரகன் ஆதரவாளர் வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
வெற்றிவேல் எம்.எல்.ஏ. இன்று சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நரசிம்மராவ்போல் அமைதியாக இருக்கக் கூடாது என்று கூறினார். அரிபோன்று தான்தோன்றித்தனமாக பேசுபவர்களை முதலமைச்சர் தடுக்க வேண்டும்.
அரி போன்று பேசுபவர்களை எப்படி கிள்ளி எரிய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் என்றார். அரி போன்றவர்களை கிள்ளி எரிய 3 மாதங்கள் வேண்டுமானால் ஆகும். ஆனால் நடவடிக்கை எடுப்பது உறுதி என்றார்.

அதிமுக எம்.பி. கோ. அரி உத்தமசீலன் போல் பேசக் கூடாது என்றும் வெற்றிவேல் கூறினார். இது போன்று பேசுபவர்களை முதலமைச்சர் தடுத்து நிறுத்தும் இடத்தில் உள்ளார். ஒரு அளவுக்குமேல் என்னால் எதையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறினார்.
தினகரனையும் சசிகலாவையும் விமர்சிக்கும் சிலரை கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்விளைவை சந்திக்க நேரிடும் என்றும் வெற்றிவேல் எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்தார்.
எடப்பாடி பழனிசாமி நரசிம்மராவ் போல் அமைதியாக இருக்கக் கூடாது. நரசிம்மராவ் மவுனம் 1996 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியது. அதுபோல எடப்பாடியின் மவுனம் அதிமுகவை வீழ்த்தும் என்றார்.
