தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து தயாநிதி மாறன் பேசிய சர்ச்சை பேச்சால் திருமாவளவனை பற்றி கார்ட்டூன் வரைந்த வர்மா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

விசிக கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பியுமான திருமாவளவன் குறித்து மோசமான வகையில் கார்ட்டூன் வரைந்து வெளிட்ட திருவெண்ணெய் நல்லூர், குமாரமங்கலத்தைச் சேர்ந்த ஓவியர் வர்மா என்கிற சுரேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். கலகம் விளைவித்தல், இணையத்தை தவறாக பயன்படுத்தியது உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக எம்.பி.க்கள் குழு கடந்த 12-ம் தேதி தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்தது. வெளியே வந்து, தலைமைச் செயலாளர் தங்களை உரிய முறையில் வரவேற்று குறை கேட்கவில்லை என ஆதங்கப்பட்டார் டி.ஆர்.பாலு. அப்போது நிருபர்களிடம் பேசிய தயாநிதி, ‘தாழ்த்தப்பட்டவங்களா நாங்கள்? மூன்றாம்தர மக்களா..?’ என கேள்வி எழுப்பினார்.இந்த விவகாரம் குறித்து மேம்போக்காக கண்டித்த திருமாவளவன் ‘இது தோழமைச் சுட்டுதல்’என குறிப்பிட்டார். தயாநிதி பெயரையும் திருமாவளவன் கூறவில்லை. இந்த மென்மையாக அணுகுமுறைக்காக, திருமாவளவன் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து கார்ட்டூன் வடிவில் புயல் கிளம்பியது. ஒரு அரசியல்வாதியின் கால் ஷூவை இன்னொருவர் ஏதோ செய்வது போல மலினமான சித்தரிக்கப்பட்ட அந்த கார்ட்டூன் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கார்ட்டூனிஸ்ட்  வர்மா என்பவர் முகநூலில் பதிவிட்டிருக்கும் இந்த கார்ட்டூனுக்கு எதிராக சிறுத்தைகள் கொந்தளித்தனர். சமூக செயல்பாட்டாளரான எவிடன்ஸ் கதிர், ‘அந்த கார்ட்டூனை வரைந்தவர் மட்டுமல்ல, அதற்கு ஆதரவாக பதிவுகளை இடுகிறவர்கள் பட்டியலையும் விரிவாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். இது பற்றி போலீஸ் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் கடும் நடவடிக்கை எடுப்போம்’ என எச்சரித்தார்.

இதற்கிடையே மற்றொரு கார்ட்டூனிஸ்டான பாலா, வழக்கமான தனது பாணியில் திருமாவை இந்த விஷயத்தில் கிண்டல் செய்து சில பதிவுகளை இட்டார். இது சிறுத்தைகள் மத்தியில், தவறுதலான புரிதல்களை உருவாக்கியதாக தெரிகிறது. வர்மா என்கிற பெயரில் பாலா-தான் மோசமான கார்ட்டூனை வரைந்ததாக ஒரு பிரசாரம் அவர்களுக்குள் விதைக்கப்பட்டது. விளைவு, திருமா மீதான கார்ட்டூன் தாக்குதலுக்கு நிகராக பாலா மீது கார்ட்டூன் தாக்குதலை சிறுத்தைகளே முன்னெடுத்தனர்.

கார்ட்டூன் வரைந்து வெளிட்ட திருவெண்ணெய் நல்லூர், குமாரமங்கலத்தைச் சேர்ந்த ஓவியர் வர்மா என்கிற சுரேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். கலகம் விளைவித்தல், இணையத்தை தவறாக பயன்படுத்தியது உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.