முதலவர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மத்திய அரசு தமிழக அரசை ஆட்டுவிக்கிறது என்றும் பன்னீர்செல்வம் பாஜக அரசின் கைப்பாவையாக செயலபடுவது போன்றும் தகவல்கள் பறந்தன.
தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கு பின்னணியிலும் ஆளும் மத்திய அரசின் கைங்கரியம் இருப்பதாக கூறப்பட்டது.

ஜெயலலிதா மறைந்த அன்று இரங்கல் தெரிவிக்க வந்த மோடி அதிமுகவை கட்டுக்குள் வைத்திருக்கும் சின்னம்மா சசிகலா தலை மீது கைவைத்து ஆறுதல் தெரிவித்து விட்டு சென்றார்.
இது குறித்த கேள்வி ஒன்று ஒரு தொலைக்காட்சி நிருபரால் வெங்கய்ய நாயுடுவிடம் இன்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த வெங்கையா "ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட பன்னீர்செல்வத்துக்கே எங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கும், மற்றவர்களுக்கு ஆதரவு கிடையாது" என கட்சியை கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பவர்கள் பற்றி மறைமுகமாக தெரிவித்தார்.
வெங்கய்யாவின் இந்த பேட்டி அரசியல் வட்டாரத்திலும் அதிமுகவிலும் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோடியை ஓபிஎஸ் சந்தித்த போது 5 நிமிடம் தனியாக என்ன பேசினார் என்று கட்சி மேலிடம் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
