Asianet News TamilAsianet News Tamil

நோட்டுக்காகவும் சீட்டுக்காகவும் பேரம்.. ராமதாஸ் சுயநிலவாதி.. பாமகவை கிழித்து தொங்கவிட்ட வேல்முருகன்..!

வன்னியர்கள் மீது உண்மையான பற்று இருந்தால், அதிமுகவில் இருந்து வெளியேறி தனியாக தேர்தலை சந்திக்க தயாரா? ராமதாஸ்க்கு  வேல்முருகன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

velumurugan slams pmk ramadoss
Author
Salem, First Published Feb 24, 2021, 3:50 PM IST

வன்னியர்கள் மீது உண்மையான பற்று இருந்தால், அதிமுகவில் இருந்து வெளியேறி தனியாக தேர்தலை சந்திக்க தயாரா? ராமதாஸ்க்கு  வேல்முருகன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழக உரிமைகளை மத்திய அரசுக்கு மாநில அரசு காவு கொடுத்து வருகிறது. வன்னியர்களுக்கு 15% உள் ஒதுக்கீடு கோரி 30 ஆண்டுகளுக்கும் மேலாக 26-க்கும் மேற்பட்ட வன்னியர் சங்கங்கள் போராடி வருகின்றன. ஆனால் பாமக தலைமைக்கு இவை பற்றியெல்லாம் அக்கறை இல்லை, நோட்டுக்கும் சீட்டுக்கும் தன் கொள்கைகளை அதிமுகவிடம் விற்பனை செய்துள்ளது. ராமதாசும், அன்புமணி ராமதாசும் வன்னியர்களை ஏமாற்றி வருகின்றனர். 

velumurugan slams pmk ramadoss

தனது உயிரே போனாலும் தனி ஒதுக்கீடு வேண்டும் என்றார் ராமதாஸ். அவரது மகன் அமைச்சரானவுடன் அந்த கோரிக்கையை கைவிட்டார். தன் கல்வி நிறுவனங்கள் வன்னியர் நல வாரிய சொத்துக்களுடன் சேர்ந்து விடாமல் இருக்கவே ராமதாஸ் பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வரை தமிழக முதல்வரை ‘டயர் நக்கி’ என்று ராமதாஸ் விமர்சித்து வந்தார். அதை முதல்வரும் மறந்து விட்டு ராமதாஸ் உடன் கூட்டணி வைத்துள்ளார் என கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். 

velumurugan slams pmk ramadoss

வன்னியர்கள் மீது உண்மையான பற்று இருந்தால், அதிமுகவில் இருந்து வெளியேறி தனியாக தேர்தலை சந்திக்க தயாரா? வரும் தேர்தலில் தமிழக மக்கள் அதிமுகவிற்கு சரியான பாடம் புகட்டுவார்கள். திமுக எனக்கு அந்தத் தொகுதியை ஒதுக்கினால் போட்டியிடுவேன். திமுக ஆட்சி அமைப்பது உறுதி என வேல்முருகன் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios