தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக உள்ள வேலுமணி மீது எதிர்க்கட்சிகள் ஊழல் புகார்கள் கூறிவருகின்றன. நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த ஊழல், சுகாதாரத் துறை சார்ந்த நியமனங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் ஊழல் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த ஊழல் சர்ச்சையில் அமைச்சர் வேலுமணி சிக்கியுள்ளார். 

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் வேலுமணியிடம் விளக்கம் கேட்ட ரிப்போர்டருக்கு பதிலளித்த அவர், “இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்துள்ளேன். எனக்கு நெருங்கியவர்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறுவது பொய். நான் விருப்பப்பட்டால் மட்டுமே நீங்கள் என்னிடம் கேள்வி எழுப்ப முடியும். மு.க.ஸ்டாலினின் பினாமியாக நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள் என்று நான் குற்றம்சாட்ட முடியுமா? என பதிலளித்துள்ளார்.

அது மட்டுமல்ல தொடர்ந்து அமைச்சர் வேலுமணியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய ரிப்போர்ட்டரிடம், முக ஸ்டாலினிடம் போய்  2௦௦ கோடி ரூபாயில் கலைஞர் டிவி எப்படி வந்ததுன்னுகேளுங்க... நான் என்ன கருணாநிதி மாதிரி  உலகத்திலேயே பத்தாவது பணக்காரன் இல்ல, அவர்கள் முன்னாடி எப்படி இருந்தார்கள் என்பது நாட்டுக்கே தெரியும் என பதிலளித்துள்ளார்.