தீக்குளித்த வேல்முருகன் பழங்குடியே அல்ல.. உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு அறிக்கை: திருப்பி அடித்த நீதிபதிகள்.

உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்தர் வேல்முருகன் என்பவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

 

Velmurugan who immolatied is not a tribe. Tamil Nadu government statement in High Court.

உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் என்பவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாக கூறி குறவர் சமூகத்தைச் சார்ந்த வேல்முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்வாறு கூறியுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை யைச் சார்ந்த மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். பத்தாம் வகுப்பு பயிலும் தனது மகனின் கல்வி தேவைக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக பழங்குடியினர் சான்றிதழ் பெற தான் போராடி வந்த நிலையில்,  ஐந்தாண்டுகளாக தான் அலைக் கழிக்கப்பட்டதாக கூறிய அவர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Velmurugan who immolatied is not a tribe. Tamil Nadu government statement in High Court.

இதையும் படியுங்கள்:  7 நிமிடங்களில் வரும் 108 ஆம்புலன்ஸ்..! தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த அன்புமணி

இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், வேல்முருகன் பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆனால் தனக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க கோரி கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி மனு அளித்தார். அதனடிப்படையில் செப்டம்பர்23 ஆம் தேதி, கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அவர் பழங்குடியினர் அல்ல என அவரது விண்ணப்பம் செப்டம்பர் 26-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:  ரூ.1 லட்சம் மாத சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு.. விண்ணப்ப பதிவு தொடங்கியது..

ஆனால் அவர் தன்னுடைய சகோதரர் என கூறி, ஒரு பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவரின் சாதி சான்றிதழை தாக்கல் செய்தார். அதை விசாரித்ததில் இளவரசனுக்கும் வேல்முருகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எந்த உறவும் இல்லை என தெரிவித்துள்ளது. இதையடுத்து கள ஆய்வின் போது அண்டை வீட்டாரிடம் மற்றும் தெருவில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் எந்த தகவலும் இடம் பெறவில்லை என கூறிய நீதிபதிகள், வேல்முருகன் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரியை நியமித்து விசாரிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

Velmurugan who immolatied is not a tribe. Tamil Nadu government statement in High Court.

மாவட்ட வருவாய் அதிகாரி அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர், அண்டை வீட்டார்கள், மற்றும் வேல்முருகன் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் சகோதரன் எனக்கூறிய இளவரசனிடம் விசாரணை நடத்தி இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios