குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த போராட்டங்களைக் கண்டிக்கும் வகையிலும், சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்தும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில். பாஜக ஆதரவாளரும். தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவருமான வேலூர் இப்ராகிம் கலந்து கொண்டு. சிஏஏவுக்கு ஆதரவுத் தெரிவித்துப் பேசினார். 

ஆனால் வேலூர் இப்ராஹிம் மீது தனிப்பட்ட முறையில் ஏராளமான புகார்கள் சமூக வலை தளங்களில் அடுக்கடுக்காக வைக்கப்பட்டது. 
இந்நிலையில் வேலூர் இப்ராகிம் மீது முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் அவரது மனைவி சர்தாஜ் பேகம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பாஜக அரசின் பிரதிநிதியாகப் பேசும் இப்ராகிம் எனக்குக் கடந்த ஆண்டே முத்தலாக் கொடுத்து விட்டார் . பாஜக அரசு முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்த நிலையில் அக்கட்சியின் ஆதரவாளரான வேலூர் இப்ராகிம் எனக்கு முத்தலாக் கொடுத்ததற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

முத்தலாக் சட்டத்தின் மூலம் தன்னை எதுவும் செய்ய முடியாது என்று ”இப்ராகிம் தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று தெரிவித்த சர்தாஜ் பேகம் , இப்ராகிமை பாஜகவிலிருந்து நீக்க வேண்டும். இதற்காக பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளேன்” என்றார்.

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேசியதால் அவரை தாக்குவதாக யூடியூப், சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுகிறது. ஆனால் பெண்களிடம் பாலியல் சேட்டை செய்ததால் தான் அவர் அடி வாங்கினார் என்றும் சர்தாஜ் பேகம் கூறினார்.