நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வருவதில் இருந்து பின்வாங்கி விட்டார் என்றும், அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றும் இருவேறு கருத்துக்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே மதுரையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என போஸ்டர்கள் ஒட்டி ரசிகர்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வேலூர், கோவை உள்பட பல்வேறு நகரங்களில் ரஜினி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்

.

அந்த வகையில் வேலூர் பகுதியில் ஒட்டப்பட்டு இருந்த ஒரு போஸ்டரில். ‘’பூ பாதையா?? சிங்கப்பாதையா?? மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் கழுகு கூட்டத்தையும், ஓநாய் கூட்டத்தையும் வேட்டையாட சிங்கபாதையில் தான் செல்ல வேண்டும். எங்கள் ஓட்டு ரஜினி ஒருவருக்கே மாற்றத்தை எதிர்பார்க்கும் வேலூர் பொதுமக்கள்’’என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரின் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.