வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்தா..? தேர்தல் ஆணையம் அதிரடி விளக்கம்..!
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக இதுவரை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக இதுவரை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் அரசியல் கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். வருமான வரித்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கதிர் ஆனந்த் வீட்டில் கடந்த மாதம் 29 மற்றும் 30-ம் தேதிளில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் சோதனையின்போது முக்கிய ஆவணங்களும், 10 லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்ப்ட்ட ஆவணங்கள் அடிப்படையில் துரைமுருகனுக்கு நெருங்கிய நண்பரும் திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசன், அவரது உதவியாளர் வீடுகளில் இருந்து 11 கோடியே 48 லட்ச ரூபாய் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்ததாக பூஞ்சோலை சீனிவாசன், வருமான வரித்துறையினரிடம் கூறியதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் கதிர் ஆனந்த் மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்ட 3 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
இந்நிலையில் வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக செய்தியாகள் வெளியானது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இது தொடர்பாக தேர்தல்ஆணையம் விளக்கமளித்துள்ளது. அதில் இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் சேய்பலி ஷரன் கூறுகையில், இதுவரை அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.