Asianet News TamilAsianet News Tamil

ஒரே நாளில் படையெடுக்கும் எடப்பாடி - மு.க.ஸ்டாலின்... ஸ்தம்பிக்கப்போகும் வேலூர்..!

வேலூர் மக்களவை தேர்தலுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே நாளில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். இதனால், அரசியல் களம் சூடுபிடிக்க உள்ளது. 

vellore election... MK Stalin, edapapdi Campaign
Author
Tamil Nadu, First Published Jul 25, 2019, 5:50 PM IST

வேலூர் மக்களவை தேர்தலுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே நாளில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். இதனால், அரசியல் களம் சூடுபிடிக்க உள்ளது. 

பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக ஏப்ரல் 16-ம் தேதி நடைபெறவிருந்த வேலூர் மக்களவை தேர்தல் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து, அதிமுக கூட்டணி கட்சி சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பு மனு தாக்கல் மற்றும் வேட்பு மனு பரிசீலனை நிறைவடைந்ததையடுத்து, வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். vellore election... MK Stalin, edapapdi Campaign

இந்நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே நாளில் வேலூரில் பிரசாரத்தை தொடங்க உள்ளனர்.  vellore election... MK Stalin, edapapdi Campaign

அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி வரும் 27, 28 மற்றும் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல்வர் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். இந்த அறிவிப்பு வெளியான சற்று நேரத்திலேயே திமுக தலைவர் ஸ்டாலினும் வரும் 27-ம் தேதியே, வேலூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். இதனால் வேலூர் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios