கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் நடைபெற்ற கட்சிக்கு கூட்டத்தில் திமுகவினர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, வேலூர் மாவட்ட செயலாளரும் ராணிப்பேட்டை தொகுதி MLA காந்திக்கும், ராணிப்பேட்டை நகர செயலாளர் பிஞ்சி பிரகாஷுக்கும்  ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ராணிப்பேட்டை திமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை  எட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது..

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து முறையிட உள்ளதாக ராணிப்பேட்டை நகர செயலாளர் பிஞ்சி பிரகாஷ் கூறியு பிஞ்சி பிரகாஷ், என்னை அடிக்க கை ஓங்கினார் காந்தி, நான் கையை பிடித்துவிட்டேன். என்மேல கை வச்சா நடக்கறதே வேற, நான் பிஞ்சி பிரகாஷ் என்கிட்ட 30 வார்டு இருக்கு, இதுவரைக்கும் நீ எனக்கு மரியாதை கொடுக்கல அதான் நான் கை ஓங்கினேன்.

என்கிட்ட மன்னிப்பு கேட்டு காலில் விழலன்னா உன் பதவியை காலி பண்றன்னு சொன்னாரு இப்போ பண்ணிட்டாரு, 53  ஒட்டு போட்டு என்ன தேர்ந்தெடுத்தாங்க அந்த 53 பேரு சொன்னாதான் என்னை விலக்க முடியும், தளபதியும் சரி பேராசிரியரும் சரி என்ன கட்சியிலிருந்து நீக்க முடியாது என ஆவேசமாக கூறினார்.