நாட்டின் 70வது சுதர்திர விழா உரையாற்றிய முதலமைச்சர் இதனை அறிவித்துள்ளார் நிர்வாக காரணங்களுக்காக  தமிழக மாவட்டங்களைப் பிரித்து, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை, தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை  32 ஆக இருந்தது

அவரின் மறைவுக்குப் பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடிபழனிசாமி தமிழக மாவட்டங்களை பிரித்து அறிவித்து வருகிறார் அவர் ஆட்சி பொறுப்பேற்று இதுவரை ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது அதன் விவரம் பின்வருமாறு:-

விழுப்புரத்தில் இருந்து   கள்ளக்குறிச்சி என புதிய மாவட்டத்தையும் திருநெல்வேலியிலிருந்து பிரித்து தென்காசியை புதிய மாவட்டமாகவும் காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரிந்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தையும் பிரித்து அறிவித்திருந்தார், இதனால் தமிழக மாவட்டங்களின்  எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது

இந்நிலையில், இன்று சுதந்திரதின விழாவில்  உரை நிகழ்த்திய முதலமைச்சர், தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமான வேலூர் மாவட்டத்தை திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு, வேலூர் வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படுவதாக என அறிவிப்பு வெளியிட்டார்

இதன்மூலம் தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. நிர்வாக காரணங்களுக்கும், மக்களின் வசதிக்காகவும், புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாகவும் அப்போது அவர் விளக்கமளித்தார்

மாவட்டங்களுக்கு ஒரு மருத்துவ கல்லூரி உருவாக்கப்படும் என்று ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில் திருப்பத்தூரிலும் ராணிப்பேட்டையிலும் மருத்துவ கல்லுரிகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால்  புதிதாக அந்த மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் இனி எதற்கெடுத்தாலும் வேலூருக்கு செல்ல தேவையில்லை என்ற நிலை உருவாகியுள்ளதால் முதல்வரின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர்

ஏற்கனவே நாகப்பட்டினத்தில் உள்ள மயிலாடுதுறையையும் தஞ்சாவூரில் உள்ள கும்பகோணத்தையும் இணைந்து கும்பகோணம் ஒருங்கிணைந்த மாவட்டமாக உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் வேலூரை திருப்பத்தூர் , ராணிப்பேட்டை என புதிய மாவட்டங்களை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

தற்போது வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் மயிலாடுதுறை கும்பகோணம் ஒருங்கிணைத்து புதிய மாவட்டம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வேலூர்  மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது