3 ஆவது சுதந்தி நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி யேற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்  கொண்டார்.

இதையடுத்து அவர் சுதந்திர உரையாற்றினார். அப்போது வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் கே.வி.குப்பத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும் என்றும் எடப்பாடி அறிவித்தார்.

இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியைத் திணிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு இரு மொழிக் கொள்கையில் உறுதியுடன் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதே போல சுதந்தி போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் 10000 ரூபாயில் இருந்து 16 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.