Asianet News TamilAsianet News Tamil

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து..? தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி முடிவு..!

வேலூரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ரூ 15 கோடி ரூபாய் சாக்கு மூட்டை, பெட்டிகளில் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டதால் வேலூர் மக்களவை தேர்தல் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

Vellore constituency cancels election? Chief Electoral Officer Action!
Author
Tamil Nadu, First Published Apr 1, 2019, 1:10 PM IST

வேலூரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ரூ 15 கோடி ரூபாய் சாக்கு மூட்டை, பெட்டிகளில் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டதால் வேலூர் மக்களவை தேர்தல் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. Vellore constituency cancels election? Chief Electoral Officer Action!

வேலூரில் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த், மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீட்டில் சோதனை நடைபெற்றது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ ஆதாரங்கள், ஆவணங்களின் அடிப்படையில் வேலூரில் துரைமுருகன், மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. பணம் பறிமுதல் செய்தது குறித்த வருமானவரித்துறை அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்படும். குற்றம் நிருப்பிக்கப்படும் பட்சத்தில் வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்படலாம். இதுவரை தமிழகத்தில் 78.12 லட்சம் கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்’’ என அவர் கூறினார். Vellore constituency cancels election? Chief Electoral Officer Action!

வருமான வரித்துறையினர் வேலூா் மாவட்டத்தில் பள்ளிகுப்பம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு, கட்டுக்கட்டாக மூட்டைகளில், அட்டைபெட்டிகளில் 2000 ரூபாய் நோட்டுகள் கட்டி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

Vellore constituency cancels election? Chief Electoral Officer Action!

ஒவ்வொரு மூட்டையிலும், வேலூர் தொகுதிக்கு உட்பட்ட வார்டுவாரியாக வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய பணம் தொடர்பாக அதில் குறிப்பு எழுதி வைக்கப்பட்டிருந்தது. இந்த பணம் ரூ.15 கோடி இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் இந்தப்பணம் கண்டெடுக்கப்பட்ட சிமெண்ட் குடோன் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமானது என வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் துரைமுருகனுக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அத்தோடு வஞ்சூர் திமுக ஊராட்சி செயலாளர் பெருமாள் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறனர்.  Vellore constituency cancels election? Chief Electoral Officer Action!

ஏற்கெனவே பணப்பட்டுவாடா புகாரில் அரவக்குறிச்சி, ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில் வேலூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  

Follow Us:
Download App:
  • android
  • ios