இளைஞரணி செயலாளர் பதவியை உதயநிதிக்கு விட்டுக் கொடுத்ததால் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக வெள்ளக்கோயில் சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். 

30 ஆண்டுகளாக திமுக இளைஞரணி செயலாளராக இருந்துவந்த மு.க.ஸ்டாலின், கட்சியின் செயல் தலைவரான பிறகு அந்தப் பதவியை துறந்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதனால் வெள்ளக்கோயில் சாமிநாதனை  திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் திமுக சட்டதிட்டக்குழு உறுப்பினராக சுபா சந்திரசேகர் நியமிக்க்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இந்நிலையில் உதயநிதி இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.